லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். லக்னௌ அணியின் கேப்டனாக ரிஷப் பந்த்துக்கு முதல் சீசன் சிறப்பாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனும் லக்னௌ அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் லக்னௌ அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Official announcement. pic.twitter.com/7WeOwpkDr6
— Lucknow Super Giants (@LucknowIPL) May 29, 2026
இது தொடர்பாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ரிஷப் பந்த் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த வேண்டுகோளை ஏற்று அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லக்னௌ அணியின் இயக்குநர் டாம் மூடி கூறியதாவது: லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் ரிஷப் பந்த் வேண்டுகோள் வைத்தார். அவரது இந்த முடிவை மதித்து அணி நிர்வாகம் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மாதிரியான முடிவுகள் ஒருபோதும் எளிதாக இருக்கவில்லை என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த் 312 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
An official announcement has been issued stating that Rishabh Pant is stepping down from the captaincy of the Lucknow Super Giants.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா் ரிஷப் பந்த்

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




