
நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு ஆஸ்திரேலிய அணியில் ஜோர்ஜியா வோல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி 2-வது போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 21 வயதான ஜோர்ஜியா வோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் போட்டியில் 46* விளாசிய ஜோர்ஜியா, 2-வது போட்டியில் 101 ரன்கள் விளாசினார். மேலும், மொத்தமாக 147 ரன்களுடன் இந்தத் தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
நியூ சௌத் வேல்ஸ் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான கவான் டுவின்னிங் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கின் உதவி பயிற்சியாளராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு இருப்பார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிபடுத்தியுள்ளது. அவருடன் ஸ்கார் பிரெஸ்ட்விட்ஜ் மற்றும் டான் மார்ஷ் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி புதன்கிழமை(டிச.11) டபிள்யூ.ஏ.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு ரோஸ் பௌல் டிராபி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொடரில் கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலிய அணி இந்தக் கோப்பை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.