வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தந்தையானார் டெவான் கான்வே!!

நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவுக்கு குழந்தை பிறந்துள்ளது பற்றி..

News image
டெவான் கான்வே - கிம் வாட்சன் தம்பதி- படம்: x/ChennaiSuperKings
Updated On :16 டிசம்பர் 2024, 8:08 am

DIN

நியூசிலாந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரருமான டெவான் கான்வேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களின் ஒருவரான டெவான் கான்வே, கடந்த 2022ஆம் ஆண்டு தனது தோழி கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடத்தியது.

இந்த நிலையில், கான்வே - கிம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக, தனது மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக கான்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.