நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை: ஆலன் பார்டர் புகழாரம்!

பும்ராவைப் போல ஒரு வீரரை இதுவரை பார்த்ததில்லை என்று ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

News image

பும்ரா- ஆலன் பார்டர்

Updated On :16 டிசம்பர் 2024, 4:42 pm

DIN

பும்ராவைப் போல ஒரு வீரரை இதுவரை பார்த்ததில்லை என்று ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷல் மற்றும் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜஸ்பிரித் பும்ராவை போல ஒரு சிறந்த வீரரை தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியா சார்பில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் இருக்கிறார்.

3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா, இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுபற்றி ஆலன் பார்டர் கூறுகையில், “என்னால் பும்ராவை மார்ஷலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை, ஆனாலும், பும்ரா மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அவர் எப்போதாவதுதான் விக்கெட் எடுக்காமல் இருப்பார். அவர் மிகவும் வித்தியாசமானவர்!.

விக்கெட் வீழ்த்தும் எல்லா நேரத்திலும் அவர் சிரிக்கிறார். அவரால் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கிவிட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும். அவரைப் போல் யாரையும் நான் பார்த்ததில்லை” என்றார்.

ஆசியாவுக்கு வெளியே அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெளிநாட்டவர் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் 3 முறையும், தென்னாப்பிரிக்காவில் 3 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் தலா 2 முறையும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.