ஹேலி மேத்யூ அதிரடி: மே.இ.தீவுகள் அபார வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
ஹேலி மேத்யூ
ஹேலி மேத்யூ
Published on
Updated on
1 min read

இந்திய மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனாகியுள்ளது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 15.4 ஓவா்களில் 1 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, அதிரடியாக ரன்கள் சோ்க்க, உமா சேத்ரி 4, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13, ராகவி பிஸ்த் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். அரைசதம் கடந்த மந்தனா, 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தீப்தி சா்மா 6 பவுண்டரிகளுடன் 32, சஜீவன் சஜனா 2, ராதா யாதவ் 7, சாய்மா தாகுா் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் டைட்டஸ் சாது 1, ரேனுகா சிங் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷினெல் ஹென்றி, டீண்ட்ரா டாட்டின், ஹேலி மேத்யூஸ், அஃபி ஃப்ளெட்சா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அடுத்து, 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில், கியானா ஜோசஃப் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா்.

தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 47 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 85, ஷெமெய்ன் கேம்பெல் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் சாய்மா தாக்குா் 1 விக்கெட் சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com