ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆஸி. இளம் வீரரிடம் வம்பிழுத்த கோலி..! தடைசெய்யப்படுவாரா?

ஆஸி. இளம் வீரர் கான்ஸ்டாஸுடன் விராட் கோலி வம்பிழுத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.

News image
ஆஸி. இளம் வீரருடம் வம்பிழுத்த கோலி- படங்கள்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிடிஐ.
Updated On :26 டிசம்பர் 2024, 5:30 am

DIN

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுடன் இந்திய வீரர் விராட் கோலி வம்பிழுத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் களமிறங்கினார்.

அதிரடியாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

10ஆவது ஓவர் முடிந்த பிறகு சாம் கான்ஸ்டாஸ் கிரீஸிலி இருந்து அந்தப் பக்கம் நடந்துசெல்லும்போது விராட் கோலி வேண்டுமென்றே அவரது பக்கம் வந்து தோள்பட்டையால் இடித்துவிடுவார்.

பின்னர் இருவரும் ஏதோ பேச, நடுவரும் கவாஜாவும் வந்து சமாதானம் செய்தார்கள்.

கோலியின் இந்தப் போக்கை பலரும் கண்டித்து வருகிறார்கள். இப்போதுதான் முதல்முறையாக அறிமுகமாகியிருக்கும் வீரரிடம் கோலி இப்படி நடந்துகொள்வது ஏற்கதக்கதல்ல இந்திய ரசிகர்களே சமூக ஊடகங்களில் கருத்துக் கூறிவருகிறார்கள்.

இது குறித்து ரிக்கி பாண்டிங், “விராட் கோலி எங்கு நடந்து வருகிறார் பாருங்கள். ஃபிட்சிலிருந்து நடந்துவந்து இந்தச் சண்டையை தூண்டுமளவுக்கு விராட் நடந்துகொண்டுள்ளார்” எனக் கூறினார்.

இதனால் 3-4 வாரங்கள் விராட் கோலி தடைசெய்யப்படுவாரென பலரும் கூறிவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.