உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை முழுமையாக வென்றது இந்தியா.

News image

இந்திய மகளிரணி - படம் | bcci x

Updated On :27 டிசம்பர் 2024, 4:21 pm IST

மேற்கிந்திய தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆட வந்த குயினா ஜோசப் மற்றும் கேப்டன் ஹேலி மேத்யூஸ் இருவருக்கும் ரேனுகா சிங் அதிர்ச்சியளித்தார். முதல் பந்திலேயே குயினா ஜோசப்பும், மூன்றாவது பந்தில் ஹேலி மேத்யூஸும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் வந்த ஷெமைன் மற்றும் ஷின்னிலே ஹென்றி இருவரும் நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஷெமைன் 46 ரன்களிலும், ஷின்னிலே ஹென்றி 61 ரன்னிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.

அசத்தலாக பந்து வீசிய ஆல்-ரவுண்டர் தீப்தி 6 விக்கெட்டுகளும், ரேனுகா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிரணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பலாக விளையாடி விக்கெட்டை விட்டனர். பின்வரிசையில் வந்தவர்கள் கணிசமான ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

அதிகபட்சமாக தீப்தி சர்மா 39 ரன்களும், ஹர்மன்பிரீத் கௌர் 32 ரன்களும், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 23 ரன்களும் எடுத்தனர். 28.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஸ் ஆக்கியது. 6 விக்கெட்கள் மற்றும் 39 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.