இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

முட்டாள்தனமான ஷாட்..! ரிஷப் பந்த்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் இந்திய வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image
ரிஷப் பந்த். - படம்: ஏபி
Updated On :28 டிசம்பர் 2024, 6:23 am

DIN

ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் இந்திய வீரர் முட்டாள்தனமான ஷாட் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் மோசமான முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடர் முழுவதும் சுமாரான பேட்டிங்கை கொடுத்துவரும் ரிஷப் பந்த் மீது விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்பட்டு வருகின்றன.

போலாண்ட் வீசிய ஓவரில் ஒரேமாதிரி ஷாட் அடிக்க முயற்சித்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வர்ணனையின்போது கூறியதாவது:

முட்டாள், முட்டாள், முட்டாள். உனக்காகவே அங்கு 2 ஃபீல்டிங் வைத்திருக்கும்போதும் நீ அந்த ஷாட்டுக்கு போகிறாய். இதற்கு முந்தைய ஷாட்டில் அடிக்கமுடியாமல் இருந்தாய். இப்போது எங்கு ஆட்டமிழந்திருக்கிறாய் பார்த்தாயா? இது உனது விக்கெட்டை தூக்கி எறிவதற்கு சமம். இந்தியாவின் சூழ்நிலைக்கு இது தேவையில்லை.

சூழ்நிலையை புரிந்து ஆட வேண்டும். இதுதான் உனது இயல்பான ஆட்டம் எனக் கூறக்கூடாது. என்னை மன்னிக்கவும் இது உங்களது இயல்பான ஆட்டம் கிடையாது. அது ஒரு முட்டாள்தனமான ஷாட். இது உங்களது அணியை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும்.

அவர் இந்திய அணியின் ஓய்வறைக்கு செல்லக்கூடாது. வேறு ஓய்வறைக்கு செல்லட்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.