யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாம் கான்ஸ்டாஸின் பலவீனத்தை கண்டறிந்த இந்தியர்கள்..! முன்னாள் ஆஸி. வீரர் கவலை!

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸின் பேட்டிங் யுக்தி குறித்து கவலை தெரிவித்த முன்னாள் வீரர்.

News image
சாம் கான்ஸ்டாஸ்- படம்: ஏபி
Updated On :31 டிசம்பர் 2024, 1:14 pm

DIN

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஓ’கெஃபே இளம் வயது (19) பேட்டர் சாம் கான்ஸ்டாஸின் பேட்டிங் யுக்தி குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார்.

முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். அதுவும் உலகின் நம்.1 பந்துவீச்சாளரான பும்ராவின் ஓவரில் சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.

முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பந்திலும் 2ஆவது இன்னிங்ஸில் பும்ரா பந்திலும் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் முன்னாள் ஆஸி. வீரர் கெர்ரி ஓ’கெஃபே சாம் கான்ஸ்டாஸின் பேட்டிங் யுக்தி கூறியதாவது:

சாம் கான்ஸ்டாஸின் ஃபார்வேர்டு டிஃபென்ஸில் இருக்கும் பிரச்னையை இந்திய வீரர்கள் கண்டறிந்துள்ளார்கள். உலக அளவிலான போட்டியில் இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளதால் மற்றவர்களும் இதை அவருக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

சாம் கான்ஸ்டாஸ் தனது முன் தோள்பட்டையை முழுவதுமாக இழந்துள்ளார். அவரது கைகளால் மட்டுமே தப்பிக்கிறார். தனது உடலில் இருந்து கைகளை தள்ளி பந்துகளை விளையாடுகிறார். அதனால் பேட்டிற்கும் பேட்-க்கும் இடையில் இடைவெளி ஏற்படுகிறது. அதில் பும்ரா நுழைந்துவிட்டார். இதுமாதிரி அதிகமான அழைப்புகளை சாம் கான்ஸ்டாஸ் அழைக்கக் கூடாது என்றார்.

முதல் இன்னிங்ஸில் அரைசதமடித்த கான்ஸ்டாஸ் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.