
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தார். தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசனின் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
மேலும் இறுது ஓவரினையும் ஹார்திக் பாண்டியா சிறப்பாக முடித்து கொடுத்தார். அதனால் இறுதியில் இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றியது.
இந்திய மக்களும் ஹார்திக் பாண்டியாவுக்கு மும்பை, வதோராவில் அமோக வரவேற்பு அளித்தார்கள்.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியா தனது இன்ஸ்டா பக்கத்தில் 2023 உலகக் கோப்பையின்போது காயம் காரணமாக வெளியேறியபோது எடுத்த புகைப்படத்தினையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “ 2023 உலகக் கோப்பை காயத்திலிருந்து எனக்கு கடினமான பயணம்தான். ஆனால் அதனிடையில் நான் எடுத்த முயற்சிதான் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு உதவியது. கடின உழைப்பு எப்போதும் கவனம் பெறாமல் போகாது. நாம் அனைவரும் நமது சிறந்த உழைப்பினை தர முயற்சிப்போம், உடல்நலத்திலும் கவனம் செலுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.