
மும்பையைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்குகிறார். இடது கை பேட்டரான இவர் இந்தியாவுக்கு டெஸ்ட்டில் 629 ரன்களும் 85 ஒருநாள் போட்டிகளில் 3,585 ரன்களும் டி20களில் 3,320 ரன்களும் எடுத்துள்ளார்.
ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட வென்றதில்லை. ஆனால் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி 2024 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது.
ஆர்சிபி அணி வரலாற்றில் மகளிர் பிரிவில் முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
ஆர்சிபி மகளிர் அணிக்கு தலைமை தாங்கியவர் ஸ்மிருதி மந்தனா.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் 28ஆவது பிறந்தநாளில் ஆர்சிபி நிர்வாகம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இளவரசி மாதிரியான தோற்றத்தில் ஸ்மிருதி மந்தனா இருக்கிறார்.
இந்தப் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.