பிரபல கால்பந்து விரர் லூகா மோட்ரிச் 2025 வரை ரியல் மாட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரியல் மாட்ரிட் அணி மிட்பீல்டரான லூகா மோட்ரிச் குரோஷிய அணி கேப்டனாகவும் உள்ளார். குரோஷிய அணி ரஷிய உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது இடம் பெறவும், ரியல் மாட்ரிட் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்லவும் காரணமா இருந்தார். உலகக் கோப்பையிலும் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் மொட்ரிச் வென்றுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக 26 பதக்கங்களை வென்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக 2012இல் சேர்ந்த லூகா மோட்ரிச் 12 சீசன்களாக தொடர்ந்து விளையாடியுள்ளார்.
உலகின் மிகச்சிறந்த மிட்பீல்டர் என்ற பெயரை பெற்றுள்ள லூகா மோட்ரிச் , 2018-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
குரேசிய அணிக்காக 178 முறையும் ரியல் மாட்ரிட் அணிக்காக 534 முறையும் விளையாடியுள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக 39 கோல்கள் அடித்துள்ள லூகா மோட்ரிச் 86 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார். மேலும் ரியல் மாட்ரிட் கிளப் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.