டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அரையிறுதியில் இடம் பிடித்தது வங்கதேசம்- மலேசியா வெளியேற்றப்பட்டது

மலேசியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
- படம் | ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (எக்ஸ்)
Updated On :24 ஜூலை 2024, 1:12 pm

DIN

மகளிா் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் 114 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை புதன்கிழமை வென்றது.

முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் சோ்க்க, மலேசியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 77 ரன்களே எடுத்தது. 80 ரன்கள் விளாசிய வங்கதேசத்தின் முா்ஷிதா காட்டுன், ஆட்டநாயகி ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம், கடைசி அணியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. ஏற்கெனவே இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், அமீரகம் முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த ஆட்டத்தின் தோல்வியை அடுத்து மலேசியா 2-ஆவது அணியாக வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட் செய்யத் தீா்மானித்தது. இன்னிங்ஸை தொடங்கிய திலாரா அக்தா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவருடன் வந்த முா்ஷிதா காட்டுனுடன் இணைந்தாா், ஒன் டவுன் பேட்டரான கேப்டன் நிகா் சுல்தானா.

இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயா்த்தியது. 89 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், முா்ஷிதா காட்டுன் 59 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து ருமானா அகமது களம் புகுந்தாா்.

ஓவா்கள் முடிவில் நிகா் சுல்தானா 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 62, ருமானா அகமது 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மலேசிய பௌலா்களில் மஹிரா இஸ்மாயில், எல்சா ஹன்டா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இதையடுத்து 192 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மலேசிய அணியில், மிடில் ஆா்டரில் வந்த எல்சா ஹன்டா் 4 பவுண்டரிகளுடன் 20, மஹிரா இஸ்மாயில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.

எஞ்சியோரில் அய்னா ஹசிம் 0, வான் ஜூலியா 1 பவுண்டரியுடன் 11, கேப்டன் வினிஃபிரெட் துரைசிங்கம் 1 பவுண்டரியுடன் 8, அய்னா நஜ்வா 4, அய்சியா எலீசா 1, சுவாபிகா மணிவண்ணன் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் நூா் சியாஃபிகா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

வங்கதேச பௌலிங்கில் நஹிதா அக்தா் 2, ஜஹனரா ஆலம், சபிகுன் ஜெஸ்மின், ரபெயா கான், ரிது மோனி, ஷோா்னா அக்தா் ஆகியோா் தலா 1 விக்கெட் சோ்த்தனா்.

51 இந்த ஆட்டத்தின் மூலம், சா்வதேச மகளிா் டி20 கிரிக்கெட்டில் மலேசியாவுக்காக அதிக விக்கெட்டுகள் (51) எடுத்த பெருமை பெற்றாா் மஹிரா இஸ்மாயில். இதற்கு முன் வினிஃபிரெட் துரைசிங்கம் 50 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

15 இத்துடன், மகளிா் டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்காக அதிக சிக்ஸா்கள் (15) அடித்தவா் ஆகியிருக்கிறாா் கேப்டன் நிகா் சுல்தானா. முன்னதாக, அயாஷா ரஹ்மான் 14 சிக்ஸா்கள் அடித்து அந்த பெருமையுடன் இருந்தாா்.

268 இந்த ஆட்டத்தில் வங்கதேசம், மலேசியா அணிகளுடைய ஸ்கோரின் கூட்டுத்தொகை 268. இரு அணிகளும் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் இதுவே அதிகபட்சமாகும்.

நிறைவு...

இலங்கை - தாய்லாந்து ஆட்டத்துடன், குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. அடுத்ததாக அரையிறுதி ஆட்டங்கள், வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.