டி20 கிரிக்கெட்டில் டு பிளெஸ்ஸி புதிய சாதனை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் டு பிளெஸ்ஸி.
டு பிளெஸ்ஸி
டு பிளெஸ்ஸிபடம்: டிஎஸ்கே / எக்ஸ்
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்தவர் டு பிளெஸ்ஸி. 40 வயதாகும் இவர் பிப்ரவரி 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, தென்னாப்பிரிக்க அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடைசியாக டிசம்பர் 2020-ல் சர்வதேச டி20யில் விளையாடினார். 

டி20 உலகக் கோப்பைக்கு இவரை தேர்வு செய்ய வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுமளவுக்கு இவரது ஆட்டம் மெருகேறியிருந்தது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களாக விளையாடியிருந்த டு பிளெஸ்ஸி தற்போது ஆர்சிபி அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.

டு பிளெஸ்ஸி
மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டிஎஸ்கே!

தற்போது எம்எல்சி எனப்படும் டி20 லீக் தொடரில் டிஎஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். பிளே ஆஃப் சுற்றில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றுள்ளார்.

தனது டி20 கிரிக்கெட்டில் இதுவரை 380 போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளெஸ்ஸி 10,500 ரன்களை எட்டியுள்ளார். இதில் 6 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் டு பிளெஸ்ஸி 14ஆவது இடத்தினை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 12,886 ரன்களுடன் 4ஆவது இடத்திலும் ரோஹித் சர்மா 11,830 ரன்களுடன் 8ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டு பிளெஸ்ஸி
ரியல் மாட்ரிட்: அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து அணியாக புதிய சாதனை!

தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களில் டு பிளெஸ்ஸி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 26 ரன்கள் முன்னிலையில் டேவிட் மில்லர் இருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:

1. கிறிஸ் கெயில் - 14,562

2. சோயிப் மாலிக் - 13,360

3. கைரன் பொல்லார்ட் - 12,963

4. விராட் கோலி - 12,886

5. அலெக்ஸ் ஹேல்ஸ் - 12,783

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com