ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கடைசி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 86/4

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 86/4 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- ANI
Updated On :1 நவம்பர் 2024, 1:25 pm

DIN

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 86/4 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை தொடங்கிய மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பும்ரா இல்லாமல் இந்திய அணி களமிறங்கிய நிலையில், 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியின் டேரல் மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. நிலைத்து ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட துவக்க ஜோடி ஜெய்ஸ்வால், ரோஹித் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரோஹித் 18, ஜெய்ஸ்வால் 30 ரன்களில் வெளியேற ஷுப்மன் கில் உள்ளே வந்தார்.

அவர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு புறம் சிராஜ் ரன் எதுவும் எடுக்காமலும், விராட் கோலி 4 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர். அதில் விராட் கோலி ரன்அவுட் முறையில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.