கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்பும் ஆஸி. வீரர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல் (கோப்புப் படம்)
கே.எல்.ராகுல் (கோப்புப் படம்)படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்திடம் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அழுத்தம் கொடுப்பேன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் போலண்ட் (கோப்புப் படம்)
ஸ்காட் போலண்ட் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, கே.எல்.ராகுலுக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் பந்துவீச உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கே.எல்.ராகுல் உலக தரத்திலான வீரர். அவருக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, அவரை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புகிறேன் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவதற்காக கே.எல்.ராகுல் முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com