ரிஷப் பந்த்தின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனை; மனம் திறந்த நியூசி. வீரர்!

மும்பை டெஸ்ட்டில் ரிஷப் பந்த்தின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த்தின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனை; மனம் திறந்த நியூசி. வீரர்!
படம் | AP
Published on
Updated on
2 min read

மும்பை டெஸ்ட்டில் ரிஷப் பந்த்தின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக இழந்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய மண்ணில் 3 மற்றும் அதற்கும் அதிகமான போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய அணியை வீழ்த்தி முழுமையாக தொடரைக் கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையையும் நியூசிலாந்து படைத்தது.

ஆட்டத்தின் திருப்பு முனை

இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நிலையில், மும்பை டெஸ்ட்டில் ரிஷப் பந்த்தின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தெரிவித்துள்ளார்.

அஜாஸ் படேல்
அஜாஸ் படேல்படம் | AP

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விக்கெட் எடுப்பதற்கு முன்பே மும்பை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான ரன்களை நியூசிலாந்து அணி குவித்துள்ளதாக நாங்கள் நம்பினோம். வெற்றி இலக்கு குறைவான போட்டிகளில் யார் உங்கள் முன்பு பேட்டிங் செய்தாலும், உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதனால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆட்டமிழப்பதற்கு முன்பே எங்களுக்கு போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

நாங்கள் எடுத்துள்ள ரன்கள் வெற்றி பெறுவதற்கு போதுமானது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால், அந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்தது. ஆனால், ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது, அவர் எங்களிடமிருந்து ஆட்டத்தை இந்தியாவுக்கு சாதகமாக எடுத்துச் சென்று விடுவதற்கான வாய்ப்பு இருந்தது. நாங்கள் பதற்றமடையாமல் அமைதியாக ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ரிஷப் பந்த்தின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது என்றார்.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் அஜாஸ் படேல் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மும்பையில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் மட்டும் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com