விராட் கோலி பிறந்தநாள்: மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்த ஒடிஸா கலைஞர்!

விராட் கோலியின் பிறந்தநாளுக்கு ஒடிஸா கலைஞர் ஒருவர் மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவின் புரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள விராட் கோலியின் மணற்சிற்பம்
ஒடிஸாவின் புரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள விராட் கோலியின் மணற்சிற்பம்
Published on
Updated on
1 min read

விராட் கோலி பிறந்தநாளுக்கு ஒடிஸா கலைஞர் ஒருவர் மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இன்று அவரது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அதன் தொடர்ச்சியாக ஒடிஸாவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் ஒடிஸாவின் புரி கடற்கரை மணலில் விராட் கோலியில் சிற்பத்தை வடிவமைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க..:பந்துவீச்சில் சந்தேகம்: ஷகிப் அல் ஹசன் பந்துவீச தடை விதிக்கப்படுமா?

இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் விராட்கோலி! உங்களது ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவை பல லட்சக்கணக்கானவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டு வெற்றி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க..: டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம் என கனவிலும் நினைக்கவில்லை: முன்னாள் நியூசி. வீரர்

2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் ஆட்டங்களில் சொதப்பி வந்த விராட் கோலி, இறுதி ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக் கோப்பையை வெல்வதற்கு பங்களிப்பு அளித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்-வாஸ் ஆனதால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகினர்.

இந்தத் தொடரில் விராட் கோலி மொத்தமாக 6 இன்னிங்சில் 100 ரன்களைக்கூட தாண்டாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதனால், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விராட் கோலி.

5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி வருகிற 22-ஆம் தேதி பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..: தலைமைப் பண்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாரா கௌதம் கம்பீர்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com