நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கேப்டனுடன் வாக்குவாதம்: மைதானத்தைவிட்டு வெளியேறிய மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்!

கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் வெளியேறியதால் பரபரப்பு..

News image

கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தைவிட்டு வெளியேறிய மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்

Updated On :7 நவம்பர் 2024, 5:18 pm IST

கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது. பிரண்டன் கிங் 102 ரன்களும், கீசி கார்ட்டி 128 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர்.

அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை. அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் கோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார்.

பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் கோப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஜாரி ஜோசப் எதுவும் தெரிவிக்காததால் பாதியிலேயே மைதானத்தைவிட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.

அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால் மேற்கிந்திய தீவுகள் அணியினர் மாற்றுவீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் 10 வீரர்களுடன் விளையாடவேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். அதன்பின்னர் மீண்டும் களத்திற்கு வந்த அல்ஜாரி ஜோசப் பத்து ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனால், பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.