இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை: நியூசி. கேப்டன்

இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை எனவும், வலுவாக திரும்பி வரும் எனவும் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
டாம் லாதம்
டாம் லாதம்படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை எனவும், இந்திய அணி வலுவாக திரும்பி வரும் எனவும் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணி, யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

விமர்சனங்களை சந்திக்க முடியாமல் இந்திய அணி திணற, பாராட்டு மழையில் நனைந்தது நியூசிலாந்து. இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றதுடன், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாற்று சாதனையையும் படைத்தது நியூசிலாந்து.

மோசமான அணியாக மாறிவிடவில்லை

இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு தாயகம் திரும்பிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம், இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை எனவும், இந்திய அணி வலுவாக திரும்பி வரும் எனவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய கிரிக்கெட் பொதுவாக உண்மையில் சிறப்பானது. இந்தியாவுக்கு எதிராக அதிக போட்டிகளில் நாங்கள் விளையாடியுள்ளோம். அவர்களுடன் ஐபிஎல் தொடரில் இணைந்து நியூசிலாந்து அணி வீரர்கள் விளையாடியுள்ளனர். தோல்வியடைந்திருந்தாலும், இந்திய அணி மிகவும் தரமான அணி. ஒரே நாளில் இந்திய அணி மோசமான அணியாக மாறிவிடாது. அவர்கள் கண்டிப்பாக இந்த தோல்வியிலிருந்து வலுவாக மீண்டு வருவார்கள் என்றார்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com