ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப் பயணம் செய்துள்ளது. ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவிருக்கிறது.
பாகிஸ்தானுக்கு 12ஆவது கேப்டனாக முகமது ரிஸ்வான் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்தத் தொடருக்கு அடுத்து டி20 தொடர் இன்று நடைபெறுகிறது.
கடைசியாக 2019இல் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் டி20 தொடரினை விளையாடியது. முதல் போட்டி மழையினால் பாதிக்க ஆஸ்திரேலியா 2-0 என தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கூறியதாவது:
ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை வென்றது தன்னம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் எப்போதும் சவாலானது. டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்.
அணியில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பங்கு என்பதை தீர்மானித்துள்ளோம். இந்தத் தொடரில் மட்டுமல்லாமல் வரும் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா தொடரிலும் இதே திட்டத்தை அமல்படுத்துவோம்.
அணியில் அனைவரையும் பங்குபெற வைப்பதும் நேர்மறையாக சிந்திக்க வைப்பது மட்டுமே எனது நோக்கம். நிச்சயமாக, இதுவரை ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது. ஆனால், நாங்கள் பேட்டிங்கிலும் எங்களது மன உறுதியை அடுத்த 3 போட்டிகளில் வெளிப்படுத்தவிருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.