
அனைத்துவிதமான, டி20 போட்டிகளையும் சேர்த்து அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், பிக்-பாஸ் போட்டிகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டியில் 12 ரன்கள் எடுத்த போது அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த முதல்வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மேக்ஸ்வெல். இவர் 6505 பந்துகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் உள்ளனர்.
குறைந்த பந்துகளில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்தவர்கள்
கிளென் மேக்ஸ்வெல்*- 6505 பந்துகள்
கீரன் பொல்லார்ட்- 6640 பந்துகள்
கிறிஸ் கெய்ல்- 6705 பந்துகள்
அலெக்ஸ் ஹேல்ஸ்- 6774 பந்துகள்
ஜோஸ் பட்லர் -6928 பந்துகள்
காலின் முன்றோ - 7025 பந்துகள்
ஆரோன் பிஞ்ச் 7096 பந்துகள்
டேவிட் வார்னர்- 7105 பந்துகள்
டேவிட் மில்லர்- 7233 பந்துகள்
குயின்டன் டிகாக்- 7272 பந்துகள்
ஜேம்ஸ் வின்ஸ்- 7376 பந்துகள்
ஃபாப் டுப்ளெஸ்ஸிஸ்- 7437 பந்துகள்
விராட் கோலி- 7467 பந்துகள்
ரோஹித் சர்மா- 7477 பந்துகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.