நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளரும், அந்த அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனுமான டிம் சௌதி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். நியூசிலாந்துக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் டிம் சௌதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
New Zealand cricket great Tim Southee plans to finish his Test career at his home ground of Seddon Park in Hamilton against England this December. https://t.co/L0li6zMeAT
— BLACKCAPS (@BLACKCAPS) November 14, 2024
2008 ஆம் ஆண்டு மார்ச்சில் தனது 19 வயதில் டிம் சௌதி இங்கிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நடந்த டி20 போட்டியில் அறிமுகமானார். நேப்பியரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 77* ரன்களும் விளாசினார்.
இவர் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் 385 விக்கெட்டுகளையும், 161 ஒருநாள் போட்டிகளில் 221 விக்கெட்டுகளையும், 125 டி20 போட்டிகளில் 164 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் தோற்றதால் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.
35 வயதான டிம் சௌதி 385 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்துக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் ரிச்சர்டு ஹார்ட்லி உள்ளார்.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 28 ஆம் தேதியும், 2-வது போட்டி வெல்லிங்டனில் டிசம்பர் 6-ஆம் தேதியும், 3-வது போட்டி ஹாமில்டனில் டிசம்பர் 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







