இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

2-வது ஒருநாள்: இலங்கைக்கு 210 ரன்கள் இலக்கு; தொடரைக் கைப்பற்றுமா?

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
- படம் | AP
Updated On :17 நவம்பர் 2024, 1:59 pm

DIN

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (நவம்பர் 17) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.

209 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து

மழையின் காரணமாக ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியில் டிம் ராபின்சன் 4 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து, வில் யங் 26 ரன்களிலும், கிளன் பிளிப்ஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து 98 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

இந்த நிலையில், மார்க் சாப்மேன் மற்றும் மிட்ச் ஹே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நியூசிலாந்தின் ஸ்கோரை உயர்த்தியது. மார்க் சேப்மேன் தொடக்கம் முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 81 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மஹீஷ் தீக்‌ஷனா

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மஹீஷ் தீக்‌ஷனா

அதன் பின், களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் (0 ரன்), கேப்டன் மிட்செல் சாண்ட்னர் (6 ரன்கள்), நாதன் ஸ்மித் (0 ரன்), ஈஷ் சோதி (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்ச் ஹே 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களின் முடிவில் 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஷிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே மற்றும் சரித் அசலங்கா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வென்ற இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் விளையாடுகிறது. தொடர் இழப்பை தவிர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து அணி களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.