தக்கவைப்பு தொகையில் உடன்பாடின்றி வெளியேறினேனா? திட்டவட்டமாக மறுத்த ரிஷப் பந்த்!

தில்லி கேபில்டஸ் அணியின் தக்கவைப்பு தொகையில் உடன்பாடின்றி ரிஷப் பந்த் அணியிலிருந்து வெளியேறினாரா என்பது தொடர்பாக...
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

தில்லி கேபிடல்ஸ் அணியின் தக்கவைப்புத் தொகையில் உடன்பாடு இல்லாததால் ரிஷப் பந்த் அந்த அணியை விட்டு வெளியேறியதாக இந்திய அணின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறிய நிலையில், அதனை ரிஷப் பந்த் மறுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக அந்த அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக வீரர்களை தக்கவைத்த பட்டியலில் தில்லி கேபிடல்ஸ் அணியில் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பெயர் இடம்பெறவில்லை. அவர் தில்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ரிஷப் பந்த் மறுப்பு

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுனில் கவாஸ்கர், ரிஷப் பந்த் தில்லி கேபிடல்ஸ் அணியால் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படலாம் எனவும், தில்லி கேபிடல்ஸ் அணிக்கும் ரிஷப் பந்த்துக்கும் தக்கவைப்பு தொகையில் உடன்பாடு எட்டப்படவில்லையா எனவும் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் இந்த கருத்தினை ரிஷப் பந்த் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: தில்லி கேபிடல்ஸ் அணியில் நான் தக்கவைக்கப்படாதது பணத்தின் காரணமாக அல்ல என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதன் முதலாக அறிமுகமானது முதல் ரிஷப் பந்த் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் 35.31 சரசாரியுடன் 3,284 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 18 அரைசதங்கள் அடங்கும்.

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ள நிலையில், ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com