தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்; மீதமிருப்பது ரோஹித் சர்மா மட்டும்தான்!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

News image

பாபர் அசாம் - படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :18 நவம்பர் 2024, 7:41 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டி இன்று (நவம்பர் 18) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

விராட் கோலி சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த போட்டியில் 41 ரன்கள் எடுத்தன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மாவுக்கும் பாபர் அசாமுக்கும் வெறும் 39 ரன்களே வித்தியாசமாக உள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள்

ரோஹித் சர்மா - 4,231 ரன்கள்

பாபர் அசாம் - 4,192 ரன்கள்

விராட் கோலி - 4,188 ரன்கள்

பால் ஸ்டிரிலிங் - 3,655 ரன்கள்

மார்ட்டின் கப்டில் - 3,531 ரன்கள்

அண்மையில் நிறைவடைந்த டி20 உலக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.