அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!

டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Babar azam

பாபர் அசாம் - படம் | ஐசிசி

Published On :5 ஜூலை 2026, 3:58 pm IST

டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாபர் அசாம் கடந்த 2023 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அணியின் புதிய கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி 16 டெஸ்ட் போட்டிகளில் 12 போட்டிகளில் தோல்வியடைந்தது. அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படத் தவறியதால், மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிப் ஜாவத் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானை சிறப்பாக வழிநடத்தும் கேப்டனை நியமிக்க விரும்பினோம். ஷான் மசூத் தனிப்பட்ட வீரராக நன்றாக விளையாடுகிறார். ஆனால், கேப்டனாக அவரிடம் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு கேப்டனுக்கு உள்ளது.

சில விஷயங்கள் அணியின் பொறுப்பாக இருக்கும், சில விஷயங்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களின் பொறுப்பாக இருக்கும். அதேபோன்று, ஓவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் வீசுவது, மேல்முறையீடு செய்வது, ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப சரியாக டாஸ் கேட்பது போன்றவை கேப்டனுக்கான பொறுப்புகளாகும் என்றார்.

பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் 20 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அதில், 10 போட்டிகளில் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, பாபர் அசாம் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாபர் அசாம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரிலிருந்து அணியை மீண்டும் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.

Summary

Babar Azam has been reappointed as the captain of the Pakistan Test team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.