டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி அண்மையில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் கான் மற்றும் கேப்டன் ஷான் மசூத் இருவரும் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அணித் தேர்வுக்குழு கூட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தான் அணியை ஷான் மசூத் கேப்டனாக வழிநடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சல்மான் அலிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நம்புகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Sources within the Pakistan Cricket Board have indicated that Salman Ali Agha could be appointed as the captain of the Pakistan Test team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

மாணவர்கள் போராட்டம் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது! சிஜேபிக்கு சல்மான் கான் ஆதரவு!

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke




