கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

“பெருமை கொள்கிறேன்...” இளம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை அந்த அணியின் சொந்த மண்ணில் வென்றது மிகவும் சிறப்பானது.

News image

கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் இந்திய வீரர்கள் - படம் | AP

Updated On :16 நவம்பர் 2024, 6:51 pm IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை அந்த அணியின் சொந்த மண்ணில் வென்றது மிகவும் சிறப்பானது என தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

பெருமை கொள்கிறேன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை அதன் சொந்த மண்ணில் கைப்பற்றியுள்ள இளம் இந்திய அணியை நினைத்து பெருமைப்படுவதாக இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.

விவிஎஸ் லக்‌ஷ்மன்

விவிஎஸ் லக்‌ஷ்மன்

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இந்த தொடர் முழுவதும் இந்திய அணி விளையாடிய விதத்தை நினைத்து உண்மையில் மிகவும் பெருமையாக உள்ளது. 3-1 என தொடரை கைப்பற்றியது சிறப்பான முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சூர்யகுமார் யாதவ் அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டார். அணியில் உள்ள அனைவரும் ஒவ்வொருவரின் வெற்றியையும் கொண்டாடுகிறார்கள். உங்கள் அனைவரையும் நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த மறக்க முடியாத வெற்றியை வசமாக்கிய இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.