நாதன் லயன்
நாதன் லயன்படம் | ஐசிசி

அவர் சாம்பியன்; அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது: நாதன் லயன்

இந்திய அணியின் நட்சத்திர வீரரை பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் புகழ்ந்து பேசியுள்ளார்.
Published on

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் புகழ்ந்து பேசியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நெருங்கும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது. கடந்த 60 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விராட் கோலி வெறும் இரண்டு சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் விராட் கோலிக்கு சிறப்பானதாக அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் அவர் வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சாம்பியன் விராட் கோலி

கடந்த சில மாதங்களாக விராட் கோலி ஃபார்மில் இல்லாத நிலையில், அவர் சாம்பியன் எனவும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது எனவும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி
விராட் கோலிபடம் | AP

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியின் சாதனைகளைப் பாருங்கள். அவர் சாம்பியன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவரது விக்கெட்டினை வீழ்த்த விரும்புகிறேன். ஆனால், அவரது விக்கெட் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. அவரை ஆட்டமிழக்கச் செய்வது மிகவும் சவாலனதாக இருக்கப் போகிறது. அவருக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் உற்சாகமாக இருக்கும்.

இந்திய அணி எப்போதும் ஆபத்தானது. அவர்களது அணி பல சூப்பர் ஸ்டார்களால் நிறைந்துள்ளது. அவர்களிடம் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும் இருக்கிறார்கள், அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களும் இருக்கிறார்கள் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்