73% விக்கெட்டுகள் வெளிநாட்டில்..! வித்தியாசமான சாதனை படைத்த பும்ரா!

இந்திய அணியின் கேப்டனும் வேகப் பந்துவீச்சாளருமான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவைவிட வெளிநாடுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா
ஜஸ்ப்ரீத் பும்ரா படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்தியா ஆஸி.க்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தற்போது, இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் 2ஆம் நாளை முடித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் மொத்தம் 11 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜாகீர் கானை சமன்செய்துள்ளார்.

சொந்த மண்ணில் 2 முறையும் வெளிநாடுகளில் 9 முறையும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மொத்தமாக சொந்த மண்ணில் 12 போட்டிகளில் 43 விக்கெட்டுகளும் வெளிநாடுகளில் 131 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.

பொதுவாக அனைவரும் சொந்த மண்ணில் சிறப்பாக பந்துவீசும்போது பும்ரா வெளிநாட்டில் அசத்தியுள்ளார். பும்ராவின் 73.58 சதவிகித விக்கெட்டுகள் வெளிநாட்டில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் அதிகமுறை வெளிநாட்டில் 5 விக்கெட்டுகள் எடுத்தவர்களில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ (21) முதலிடத்தில் இருக்கிறார். மெக்ரத் (18), வாசிக் அக்ரம் (17) அடுத்தடுத்த வரிசையில் இருக்கிறார்கள்.

இந்தியாவின் கபில்தேவ் வெளிநாட்டில் 12 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். ஆனால், பும்ராவின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 73 சதவிகித விக்கெட்டுகள் வெளிநாடுகளில் என்பது வியக்கதக்க சாதனையாகவே இருக்கிறது.

இந்தத் தொடரில் இன்னும் 4 போட்டிகள், ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ள நிலையில் பல சாதனைகளை பும்ரா முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com