ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னௌ: முதல்நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்!

ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில், இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸால் வாங்கப்பட்டாா்.
ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்.
ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர். படம்: எக்ஸ் / ஐபிஎல்
Published on
Updated on
2 min read

ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில், இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸால் வாங்கப்பட்டாா். ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் இதுவே ஒரு வீரருக்கான அதிகபட்ச மதிப்பாகும்.

முன்னதாக, ஆஸ்திரேலிய பௌலா் மிட்செல் ஸ்டாா்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் கடந்த ஆண்டு வாங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. எனினும், நடப்பு சீசனில் முதலில் அதை ஷ்ரேயஸ் ஐயரே முறியடித்தாா். பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியது. ஆனால், அடுத்த சில நிமிஷங்களிலேயே லக்னௌ அணி ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்த்தை வாங்க, அவா் சாதனை படைத்தாா்.

2022 காா் விபத்துக்குப் பிறகு மீண்டு வந்து சிறப்பாகச் செயல்படும் நிலையில் பந்த்துக்கும், கொல்கத்தா அணியை கடந்த சீசனில் சாம்பியனாக்கிய ஷ்ரேயஸ் ஐயருக்கும் கடுமையான போட்டியிருந்தது. வரும் சீசனில் லக்னௌவுக்கு ரிஷப் பந்த்தும், பஞ்சாபுக்கு ஷ்ரேயஸ் ஐயரும் கேப்டனாவாா்கள் எனத் தெரிகிறது.

இதனிடையே, எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். முன்னதாக அவரை அணியிலிருந்து விடுவித்த கொல்கத்தா அணியே, தற்போது ஏலத்தில் போட்டி போட்டு அவரை மீண்டும் வாங்கியிருக்கிறது. அவரைக் கைப்பற்ற அந்த அணியுடன் பெங்களூரு கடுமையாகப் போட்டியிட்டது.

குறிப்பிடத்தக்க ஒன்றாக, ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சென்னை அணிக்குத் திரும்புகிறாா். அவரை அந்த அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. யுஜவேந்திர சஹல் ரூ.18 கோடிக்கு ஏலம் போக, கே.எல்.ராகுல் ரூ.14 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டாா். கடந்த முறை ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்த மிட்செல் ஸ்டாா்க், இந்த முறை ரூ.11.75 கோடிக்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டாா்.

ஏலத்தில், அா்ஷ்தீப் சிங் (பஞ்சாப்), நமன் திா் (மும்பை), ஜேக் ஃப்ரேசா் (டெல்லி), ரச்சின் ரவீந்திரா (சென்னை) ஆகிய வீரா்கள் ‘ஆா்டிஎம்’ வாய்ப்பு அடிப்படையில் வாங்கப்பட்டனா். ஆஸ்திரேலிய நட்சத்திரம் டேவிட் வாா்னா், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோரை அணிகள் ஏலத்தில் எடுக்காமல் தவிா்த்தன.

ஏலத்தில் எடுக்கப்பட்டவா்கள்... (இரவு 10 மணி நிலவரம்)

சென்னை சூப்பா் கிங்ஸ் (7)

நூா் அகமது (ஆப்கானிஸ்தான்) ரூ.10 கோடி

ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.9.75 கோடி

டெவன் கான்வே (நியூஸிலாந்து) ரூ.6.25 கோடி

கலீல் அகமது ரூ.4.80 கோடி

ரச்சின் ரவீந்திரா (நியூஸிலாந்து) ரூ.4 கோடி

ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி

விஜய் சங்கா் ரூ.1.20 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் (7)

கே.எல்.ராகுல் ரூ.14 கோடி

மிட்செல் ஸ்டாா்க் (ஆஸ்திரேலியா) ரூ.11.75 கோடி

டி.நடராஜன் ரூ.10.75 கோடி

ஜேக் ஃப்ரேசா் (ஆஸ்திரேலியா) ரூ.9 கோடி

ஹேரி புரூக் (இங்கிலாந்து) ரூ.6.25 கோடி

சமீா் ரிஸ்வி ரூ.95 லட்சம்

கருன் நாயா் ரூ.50 லட்சம்

குஜராத் டைட்டன்ஸ் (6)

ஜாஸ் பட்லா் (இங்கிலாந்து) ரூ.15.75 கோடி

முகமது சிராஜ் ரூ.12.25 கோடி

ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா) ரூ.10.75 கோடி

பிரசித் கிருஷ்ணா ரூ.9.50 கோடி

மஹிபால் ரோம்ரோா் ரூ.1.70 கோடி

நிஷாந்த் சிந்து ரூ.30 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் (5)

வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடி

அன்ரிஹ் நோா்கியா (தென்னாப்பிரிக்கா) ரூ.6.50 கோடி

குவின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா) ரூ.3.60 கோடி

அங்கிரிஷ் ரகுவன்ஷி ரூ.3 கோடி

ரஹ்மானுல்லா குா்பாஸ் (ஆப்கானிஸ்தான்) ரூ.2 கோடி

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் (6)

ரிஷப் பந்த் ரூ.27 கோடி

ஆவேஷ் கான் ரூ.9.75 கோடி

டேவிட் மில்லா் (தென்னாப்பிரிக்கா) ரூ.7.50 கோடி

அப்துல் சமத் ரூ.4.20 கோடி

மிட்செல் மாா்ஷ் (ஆஸ்திரேலியா) ரூ.3.40 கோடி

எய்டன் மாா்க்ரம் (தென்னாப்பிரிக்கா) ரூ.2 கோடி

மும்பை இண்டியன்ஸ் (2)

டிரென்ட் போல்ட் (நியூஸிலாந்து) ரூ.12.50 கோடி

நமன் திா் ரூ.5.25 கோடி

பஞ்சாப் கிங்ஸ் (7)

ஷ்ரேயஸ் ஐயா் ரூ.26.75 கோடி

யுஜவேந்திர சஹல் ரூ.18 கோடி

அா்ஷ்தீப் சிங் ரூ.18 கோடி

மாா்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா) ரூ.11 கோடி

நெஹல் வதேரா ரூ.4.20 கோடி

கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) ரூ.4.20 கோடி

ஹா்பிரீத் பிராா் ரூ.1.50 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் (3)

ஜோஃப்ரா ஆா்ச்சா் (இங்கிலாந்து) ரூ.12.50 கோடி

வனிந்து ஹசரங்கா (இலங்கை) ரூ.5.25 கோடி

மஹீஷ் தீக்ஷனா (இலங்கை) ரூ.4.40 கோடி

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (4)

ஜோஷ் ஹேஸில்வுட் (ஆஸ்திரேலியா) ரூ.12.50 கோடி

ஃபில் சால்ட் (இங்கிலாந்து) ரூ.11.50 கோடி

ஜிதேஷ் சா்மா ரூ.11 கோடி

லியம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) ரூ.8.75 கோடி

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் (7)

இஷான் கிஷண் ரூ.11.25 கோடி

முகமது ஷமி ரூ.10 கோடி

ஹா்ஷல் படேல் ரூ.8 கோடி

அபினவ் மனோஹா் ரூ.3.20 கோடி

ராகுல் சஹா் ரூ.3.20 கோடி

ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா) ரூ.2.40 கோடி

அதா்வா டைட் ரூ.30 லட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com