ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

ஹாரி புரூக் சதத்தால் மீண்ட இங்கிலாந்து..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 319 ரன்கள் குவித்துள்ளது.

News image
சதமடித்த ஹாரி புரூக், பாராட்டும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். - படம்: ஏபி
Updated On :29 நவம்பர் 2024, 7:49 am

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 319 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 348க்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் முடிவில் 74 ஓவர்களில் 319/5 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சார்பாக ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆடுகளத்தில் ஹாரி புரூக் 132 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து ஸ்கோர் போர்டு

ஜாக் கிராவ்லி - 0

பென் டக்கெட் - 46

ஜகோப் பெத்தெல் - 10

ஜோ ரூட் - 0

ஹாரி புரூக் - 132*

ஆலி போப் - 77

பென் ஸ்டோக்ஸ் - 37*

நியூசி. சார்பில் நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகளும் டிம் சௌதி, மாட் ஹென்றி, வில்லியம் ரூர்கே தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

29 ரன்கள் பின்னிலையில் இருந்தாலும் இங்கிலாந்து வலுவான நிலையிலேயே இருக்கிறது. மீதமுள்ள 3 நாள்களில் யாருடைய ஆதிக்கம் தொடர்கிறதோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.