கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை குறித்து...

England's captain Harry Brook celebrates his century during the T20 World Cup cricket match between England and Pakistan in Pallekele, Sri Lanka, Tuesday, Feb. 24, 2026. (AP Photo/Eranga Jayawardena)

சதமடித்த மகிழ்ச்சியில் ஹாரி புரூக். - படம்: ஏபி

Published On :

டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

முதல்முறையாக ஒரு அணியின் கேப்டன் டி20 உலகக் கோப்பையில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 164/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 166/8 ரன்கள் எடுத்து வென்றது.

தொடக்கத்திலேயே 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் விழுந்தபோது ஹாரி புரூக் மூன்றாம் இடத்தில் களமிறங்கி மிகவும் அதிரடியாக விளையாடினார்.

சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட ஹாரி புரூக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டி20 உலகக் கோப்பையின் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள்

100 - ஹாரி புரூக் (பாகிஸ்தானுக்கு எதிராக, 2026)

98 - கிறிஸ் கெயில் (இந்தியாவுக்கு எதிராக, 2010)

94 - லோர்கன் டக்கர் (ஓமனுக்கு எதிராக, 2026)

92 - ரோஹித் சர்மா (ஆஸி.க்கு எதிராக, 2024)

ஹாரி புரூக்கின் பேட்டிங்கை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த ஆட்டம் என முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள்.

Summary

Harry Brook sets world record in T20 World Cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.