கடவுளின் திட்டம்..! புதிய டாட்டூவின் விளக்கம் பகிர்ந்த ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் தனது புதிய டாட்டூவிற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
ரிங்கு சிங்கின் புதிய டாட்டூ.
ரிங்கு சிங்கின் புதிய டாட்டூ. படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் தனது புதிய டாட்டூவிற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என அபார வெற்றி பெற்றது. அக்.6., அக்.9., அக்.12 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

கடவுளின் திட்டம்

பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் ரிங்கு சிங் விடியோவை வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில் தனது கடவுளின் திட்டம் என்ற புதிய டாட்டூவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விடியோவில் ரிங்கு சிங் கூறியதாவது:

நான் இந்த டாட்டூவை கடவுளின் திட்டம் என்றுதான் சொல்லுவேன். அதன் அடிப்படையில்தான் இந்த டாட்டூவை உருவாக்கினேன். சில வாரங்களுக்குப் முன்புதான் இந்த யோசனை கிடைத்தது. கடவுளின் திட்டம் என்ற வார்த்தை வட்டத்துக்குள் இருக்குமாறு பொறிக்கப்பட்டுள்ளது. அது சூரியனை குறிப்பதாகும்.

நான் ஐபிஎல்-இல் அடித்த 5 சிக்ஸர்களை குறிக்கவே இந்த டாட்டூவை பயன்படுத்தினேன். அந்த சிக்ஸர்கள்தான் எனது வாழ்க்கையை மாற்றியது. அதனால் அதை எனது டாட்டூவில் இணைத்துக்கொள்ள விரும்பினேன் எனக் கூறியுள்ளார்.

2023இல் கொல்கத்தா அணிக்காக ரிங்கு சிங் விளையாடும்போது குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த யஷ் தயாள் ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து முக்கியமான வெற்றிக்கு வித்திட்டார் ரிங்கு சிங்.

டி20க்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதீஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com