முதல்முறையாக வாக்களித்த மனு பாக்கர்..! இளைஞர்களுக்கு கூறிய அறிவுரை என்ன?

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்துள்ள அனுபவம் பகிர்ந்தார் மனு பாக்கர்.
முதல்முறையாக வாக்களித்த மனு பாக்கர்.
முதல்முறையாக வாக்களித்த மனு பாக்கர்.
Published on
Updated on
1 min read

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்துள்ள அனுபவம் பகிர்ந்தார் 22 வயதான மனு பாக்கர்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 22.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர்.

மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இந்நிலையில் பேட்டியளித்த மனு பாக்கர் கூறியதாவது:

நமது நாட்டின் இளைஞர்களாக இருக்கும் நாம் வாக்களிப்பது நமது கடமை. உங்களுக்கு யார் சிறந்த தலைவராக, சிறந்த வேட்பாளராக தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். நமது சிறிய முயற்சிதான் பெரிய இலக்குகளுக்கு வித்திடும். முன்னேற்றம் நமது கைகளில் இருக்கிறது. ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள்தான் நமது கனவை நிறைவேற்றுவார்கள்.

நான் முதன்முதலாக வாக்களித்துள்ளேன். வாக்களிக்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். வாக்களித்தில் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார்.

தனது எக்ஸ் பக்கத்தில் இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

விருது வென்ற மனு பாக்கர் இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் மனு பாக்கரை கிண்டல் செய்து வந்தனர். எங்கு சென்றாலும் இந்தப் பதக்கங்களுடன் செல்வதா என சிலர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

”2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் வென்ற இரண்டு வெண்கல பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது. எப்போதெல்லாம் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்து, பதக்கங்களைக் காண்பிக்க சொல்கிறார்களோ அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமையுடன் காண்பிப்பேன்” எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.