
மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீகன் ஷட் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி, செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்..! 35ஆவது சதமடித்த ஜோ ரூட்!
முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 19.2 ஓவா்களில் 88 ரன்களே எடுத்து 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 3 ரன்களே கொடுத்து, 3 விக்கெட்டுகள் சாய்த்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மீகன் ஷட் அசத்தினார்.
இந்த 3 விக்கெட்டுகள் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெடுகள் எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்
மீகன் ஷட் (ஆஸி. ) - 46
ஷப்னிம் இஸ்மாயில் (தெ.ஆ.) - 43
அன்யா ஷ்ருஸோலே (இங்கிலாந்து) - 41
எலிஸ் பெர்ரி (ஆஸி.) - 40
ஸ்டாஃபெனி டெய்லர் (மே.இ.தீ.) - 33
நியூசிலாந்து எதிரான போட்டியில் 2013இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 115 டி20 போட்டிகளில் விளையாடி 143 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
31 வயதாகும் மீகன் ஷட் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியதால் ஆட்ட நாயகி விருது பெற்றும் அசத்தினார்.