
நியூசிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அக்.16ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் நவ.1இல் தொடங்குகிறதும் குறிப்பிடத்தக்கது.
கேன் வில்லியம்சன் 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,881 ரன்கள் எடுத்துள்ளார். 54.48 சராசரியுடன் விளையாடி வருகிறார்.
கேன் வில்லியம்சன் விலகல்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், “கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தொடையின் தசைப்பிடிப்பு காரணமாக விலகுகிறார். இவருக்குப் பதிலாக ஆக்லேண்ட் ஏசஸ் பேட்டர் மார்க் சாப்மன் அணியில் இணைகிறார்” எனக் கூறியுள்ளது.
நியூசிலாந்து அணியின் தேர்வாளர் சாம் வெல்ஸ், “காயத்துடன் விளையாடி கேன் வில்லியம்சனுக்கு இன்னும் பாதிப்பு பெரிதாக ஆகாமல் தடுக்கவே அவரை ஓய்வெடுக்க வைக்கிறோம். இதுதான் மருத்துவர்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறந்த அறிவுரையாகும்.
இதையும் படிக்க: அதிரடியாகதான் விளையாடுவோம்..! மஹ்மதுல்லா பேட்டி!
இந்தியாவுக்கான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார். இது நியூசிலாந்து அணிக்கு பாதிப்பு. அவருக்கு பதிலாக யாராவது பொறுப்புடன் விளையாட வேண்டும்” என்றார்.
டெஸ்ட்டில் அறிமுகமாகும் சாப்மன்!
30 வயதாகும் மார்க் சாப்மன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து 6ஆவது இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் வங்கதேசத்துடன் தோல்வியை சந்தித்ததால் டிம் சௌதி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளூண்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் போட்டி மட்டும்), மார்க் சாப்மன், டெவோன் கான்வே, மாட் ஹென்ரி, டேரில் மிட்செல், வில்லியம் ரூர்கே, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சௌதி (2,3 டெஸ்ட்டில்) டிம் சௌதி, கேன் வில்லியம்சன், வில் யங்.