அதிவேகமாக முச்சதமடித்த ஹாரி புரூக்..! இங்கிலாந்து 800 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 800 ரன்கள் குவித்துள்ளது.
ஹாரி புரூக்
ஹாரி புரூக்Anjum Naveed
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 800 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556க்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணி மிக அதிரடியாக விளையாடி வருகிறது.

ஜோ ரூட் 262 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஹாரி புரூக் அதிரடியாக தனது முதல் முச்சதத்தை நிறைவு செய்தார்.

அதிவேகமாக முச்சதமடித்த பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார் ஹாரி புரூக். இந்தியாவின் விரேந்தர் சேவாக் 278 பந்துகளில் 2008ல் முச்சதம் அடித்து முதலிடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.

310 பந்துகளில் ஹாரி புரூக் இந்தப் போட்டியில் முச்சதம் அடித்தார்.

317 ரன்களுக்கு ஹாரி புரூக் ஆட்டமிழந்தார். தற்போது, இங்கிலாந்து அணி 148 ஓவரில் 805/7 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com