இந்தியாவுக்கு எதிரான சவாலுக்கு தயார்: நியூசி. கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சவாலுக்கு தயாராக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சவாலுக்கு தயாராக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (அக்டோபர் 16) முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

சவாலுக்கு தயார்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சவாலுக்கு தயாராக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணியை மிகவும் சவாலான எதிரணியாக மாற்றியுள்ளது. இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்திய அணியில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதேபோல வேகப் பந்துவீச்சிலும் அவர்களிடம் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் போன்ற சிறந்த பந்துவீச்சு வரிசை உள்ளது. அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக இருப்பதால், இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கப் போகிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த சவாலை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம்.

கடந்த இரண்டு முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியதிலிருந்து எங்களுக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரின்போது, அந்த அனுபவம் மிகுந்த உதவியாக இருக்கும் என நம்புகிறேன். இந்த டெஸ்ட் தொடரின் ஆரம்ப போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளது ஏமாற்றமளிக்கிறது. அவர் விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவதை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். அணியின் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது பணியை சிறப்பாக செய்ய என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் முயற்சி செய்வேன். கேப்டனாக இருப்பதால் எனது மற்ற பொறுப்புகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்கப் போவதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com