கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

டெவான் கான்வே அரைசதம்: ஆதிக்கம் செலுத்தும் நியூஸிலாந்து அணி!

டெவான் கான்வே அரைசதத்தால் நியூஸிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

News image

டெவான் கான்வே

Updated On :17 அக்டோபர் 2024, 1:18 pm

DIN

டெவான் கான்வே அரைசதத்தால் நியூஸிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணியினர்

இந்திய அணியினர்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்டிங் வரிசை நியூஸிலாந்து அணியின் வேகத்தில் சிக்கி சீர்குலைந்தது. இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் மட்டும் 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மேலும் 5 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய அணியினர் தடுமாறிய ஆடுகளத்தில் நியூஸிலாந்து வீரர் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் நியூஸிலாந்து கேப்டன் டாம் லாதம் 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவருக்குப் பின் வந்த வில் யங் டெவான் கான்வேவுக்கு நன்கு ஒத்துழைப்பளித்தார்.

வில் யங் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெவோன் கான்வே 11 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேரம் முடிவில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டேரில் மிட்சல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் நாளை(அக்.18) நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.