
பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் 5 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். உணவு இடைவேளை வரை இந்திய அணி 34/6 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து விளையாடிய அஸ்வினும் டக் அவுட்டானார்.
தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களுக்கு 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள், வில்லியம் ரூர்க்கே 4 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
இந்திய அணியின் ஸ்கோர் கார்டு
ஜெய்ஸ்வால் - 13
ரோஹித் சர்மா - 2
விராட் கோலி - 0
சர்ஃபராஸ் கான் - 0
ரிஷப் பந்த் - 20
கே.எல்.ராகுல் - 0
ரவீந்திர ஜடேஜா -0
ரவி அஸ்வின் - 0
ஜஸ்பிரீத் பும்ரா - 1
குல்தீப் யாதவ் - 2
முகமது சிராஜ் -4*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.