கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியா - நியூசி டெஸ்ட்: தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, போதிய தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:57 pm

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, போதிய தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.

நியூசிலாந்து - 259/10

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரசிகர்கள் கோபம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் போட்டியைக் காண கிட்டத்தட்ட 18,000 பேர் வந்துள்ளனர். அவர்களில் பலரும் மைதானத்தில் மேற்கூரை இல்லாததால், சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு போட்டியை கண்டு களித்தனர். போட்டியின் முதல் ஷெஷன் முடிவில் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள் வாங்குவதற்காக சென்றபோது, தண்ணீர் பாட்டில்கள் போதிய அளவில் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ரசிகர்களுக்கு ஏற்பட்ட இந்த அசௌகரியத்துக்கு மகாராஷ்டிர கிரிக்கெட் வாரியம் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர கிரிக்கெட் வாரிய செயலர் கமலேஷ் பிசால் பேசியதாவது: ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு எங்களது மன்னிப்பினை கேட்டுக் கொள்கிறோம். இனிவரும் நாள்களில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல், ரசிகர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தண்ணீர் தட்டுப்பாட்டை நாங்கள் ஏற்கனவே சரிசெய்துவிட்டோம். ஆனால், அதிக அளவிலான தண்ணீர் பாட்டில்கள் தேவைப்பட்டாதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.