இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரரை தேர்வு செய்ய வேண்டும்.

News image

ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப் படம்)

Updated On :24 அக்டோபர் 2024, 10:30 am

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவரை தேர்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்தை நிரப்ப இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை. சில போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால், அவர் அந்த அளவுக்கு பெரிதாக சோபிக்கவில்லை.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணி விருப்பப்பட்டால் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான வீரர் வேண்டும்

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரருக்கான தேடல் தொடரும் நிலையில், தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடக் கூடியவரை தேர்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மைக்கேல் கிளார்க் (கோப்புப் படம்)

மைக்கேல் கிளார்க் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஸ்டீவ் ஸ்மித்தை தேர்ந்தெடுத்து ஆஸ்திரேலிய அணி தவறான முடிவை எடுத்தது. அதனால், இந்த முறை அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது. தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜோஷ் இங்லிஷை தொடக்க ஆட்டக்காராக களமிறக்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய பந்துவீச்சுக்கு எதிராக மிடில் ஆர்டரில் விளையாடும் ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக எவ்வாறு களமிறக்க முடியும். உள்ளூர் போட்டிகளில் ரன்கள் குவிப்பதால் மட்டும் வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு சரியாக இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் களமிறங்கும் இடங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல, உள்ளூர் போட்டிகளில் சரியாக ரன்கள் எடுக்காத மூன்று வீரர்களின் பெயர்கள் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரருக்கான பரீசிலனையில் உள்ளது.

தொடக்க ஆட்டக்காரராக கேமரூன் பான்கிராஃப்டை களமிறக்கலாம் எனக் கூறுவேன். ஏனென்றால், ஷீல்டு கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அதிக ரன்கள் குவித்தவராக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

சாம் கொன்ஸ்டாஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் இங்லிஷ் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி ஆகியோரின் பெயர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்காக பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.