ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தது குறித்து மனம் திறந்த ஹர்ஷித் ராணா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து இளம் வீரர் ஹர்ஷித் ராணா மனம் திறந்துள்ளார்.
ஹர்ஷித் ராணா (கோப்புப் படம்)
ஹர்ஷித் ராணா (கோப்புப் படம்)படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து இளம் வீரர் ஹர்ஷித் ராணா மனம் திறந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் மூன்று அன்கேப்டு வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அதில் இளம் வீரர் ஹர்ஷித் ராணாவும் ஒருவர்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், வலதுகை வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சரசாரி 20.15 ஆகும்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற ஹர்ஷித் ராணா, முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தந்தைக்கு சமர்ப்பணம்

இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள ஹர்ஷித் ராணா, டெஸ்ட் அணியில் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்ததை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது தந்தைக்கு கடன்பட்டிருக்கிறேன் என்பதை நான் எப்போதும் கூறுவேன். காயங்கள் காரணமாக நான் சோர்வாக இருந்தபோது, எனக்கு நம்பிக்கையளித்து தொடர்ந்து போராட ஊக்கம் கொடுத்தவர் எனது தந்தை. அவர் எப்போதும் என்னிடம் கூறுவது இதுதான்.

ஒரு விஷயம் இன்று நடைபெறவில்லையென்றால், நாளை நடைபெறும். நாளையும் நடைபெறவில்லையெனில், அதற்கு அடுத்த நாள் நடைபெறும். அந்த விஷயம் நடைபெறவே இல்லையென்றாலும், அந்த விஷயத்துக்காக நீ மேற்கொண்ட கடின உழைப்பை நினைத்து நான் பெருமையடைவேன் என்பார். அவரது அந்த வார்த்தைகளே எனது உலகம் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com