
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிறிஸ்டன், இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பாகிஸ்தானின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: கௌதம் கம்பீர் விரைவில் கற்றுக் கொள்வார்: ரவி சாஸ்திரி
இந்த நிலையில், பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட 6 மாதத்துக்குள் கேரி கிறிஸ்டன் விலகியுள்ளார். பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகியுள்ள நிலையில், டெஸ்ட் அணியின் பயிற்சியாளரான ஜேசன் கில்லெஸ்பி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகுவதாக ராஜிநாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். அவரது இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள தொடருக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.