ஜோஷ் இங்லிஷ் (கோப்புப் படம்)
ஜோஷ் இங்லிஷ் (கோப்புப் படம்)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறாரா ஜோஷ் இங்லிஷ்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஷ் களமிறங்க வாய்ப்புள்ளது.
Published on

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஷ் களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடர்ச்சியாக 5-வது முறையாக பார்டர் - கவாஸ்கர் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமா?

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஷ் சிறப்பான ஃபார்மில் உள்ளார். 29 வயதாகும் ஜோஷ் இங்லிஷ் ஆஸ்திரேலிய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் கடைசியாக விளையாடிய 7 ஷீல்டு போட்டிகளில் 4 சதங்கள் எடுத்துள்ளார்.

சிறப்பான ஃபார்மில் உள்ள ஜோஷ் இங்லிஷை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற வைப்பதற்கான ஆலோசனை சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: ஜோஷ் இங்லிஷ் சிறப்பான ஃபார்மில் உள்ளார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச போட்டிகளில் விளையாடிவிட்டு, உள்ளூர் போட்டிகளுக்குத் திரும்பி அங்கும் சிறப்பாக விளையாடுவது சிறப்பான விஷயம். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அவரை இடம்பெற செய்வது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கெட் கீப்பராக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். ஜோஷ் இங்லிஷ் மிடில் ஆர்டர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். ஆனால், அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நினைக்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com