
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எந்த வீரர்களை தக்கவைக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. மெகா ஏலத்துக்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் தங்களது அணிகளில் உள்ள 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என அண்மையில் தெரிவிக்கப்பட்டது. அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறாரா ஜோஷ் இங்லிஷ்?
3 வீரர்களை தக்கவைக்க திட்டம்
அணிகள் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பெயர்களை சமர்பிக்க இன்னும் ஒரு சில நாள்களே உள்ள நிலையில், நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தக்கவைக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம் நிக்கோலஸ் பூரன் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தக்கவைக்க தயாராக இருக்கிறது. கடந்த சீசனில் லக்னௌ அணியை அவர் கேப்டனாக வழிநடத்தினார். அவரது தேசிய அணியை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. அவரைத் தவிர்த்து, வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோரையும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் தக்கவைக்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னௌ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் தக்கவைக்கப் படாமல் மெகா ஏலத்தின் வழியாக பங்கேற்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.