ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கௌதம் கம்பீர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார்: ராகுல் டிராவிட்

கௌதம் கம்பீருக்கு அதிக அனுபவம் இருப்பதாகவும், அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 2:18 pm

கௌதம் கம்பீருக்கு அதிக அனுபவம் இருப்பதாகவும், அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜூலையில் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவரது தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதிக அனுபவம் உடையவர்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீருக்கு அதிக அனுபவம் இருப்பதாகவும், அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் எனவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட் (கோப்புப் படம்)

ராகுல் டிராவிட் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அணியில் ஒரு வீரராக அவர் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார். பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு இருக்கிறது. அவரது அனுபவத்தால் இந்திய அணி கண்டிப்பாக பயனடையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.