ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | AP

எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Published on

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூலம், நீண்ட நாள்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிக்குத் திரும்பினார். கார் விபத்தில் சிக்கி குணமடைந்த பிறகு ரிஷப் பந்த் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் 39 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்களும் எடுத்து அசத்தினார்.

எம்.எஸ்.தோனியின் சாதனை சமன்

இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம், ரிஷப் பந்த் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.

எம்.எஸ்.தோனி (கோப்புப் படம்)
எம்.எஸ்.தோனி (கோப்புப் படம்)படம் | ஐபிஎல்

டெஸ்ட் போட்டிகளில் எம்.எஸ்.தோனியும், ரிஷப் பந்த்தும் இதுவரை 6 சதங்கள் விளாசியுள்ளனர். இந்தப் பட்டியலில் விருத்திமான் சஹா 3 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com